Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் தற்போது, வன்முறைச் சம்பவங்கள், சட்ட விரோதச் செயற்பாடுகள் என்பன அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேர தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொக்குவில், இருபாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டும் 9 பேர் காயமடைந்தும் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மேலும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்கா வற்றுறையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் யாழ்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இக்கொலைக்கு குடும்பப் பகையே காரணம் என விசாரணைகள் மூலம் தெரிவயவந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025