2025 மே 19, திங்கட்கிழமை

தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளை

Super User   / 2011 செப்டெம்பர் 24 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சித்தங்கேணி கீரிமலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையர் குழு, வீட்டிலிருந்த தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க ஆபரணங்களையும் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களையும் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக  வட்டுக் கோட்டை பொலிஸார் கூறினர்.

கொள்ளையரின் வாள்வெட்டிற்கு இலக்காகிய சுந்தரலிங்கம் மங்கையக்கரசி, அவரின் மகன் சுந்தரலிங்கம் ராஜன் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X