2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் கட்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைத்து செயற்பட வேண்டும்: வி.ஆனந்தசங்கரி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
'எந்தவித பாகுபாடுகளும் இன்றி தமிழ் கட்சிகள் சேர்ந்து இயங்க தயாராக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களை இணைத்து செயற்படவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஞயிற்றுக்கிழமை  காலை நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

"தமிழ் கட்சிகளான நாங்கள் எங்களுக்குள் பேதங்களை மறந்து தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு பொதுவிடயத்திற்காக ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

நாங்கள் எதையும் தனித்து செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். எமது மக்களின் பிரச்சனைகள் குறித்து வாய்திறக்க முடியாத நிலையில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ளது.

இன்று தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள். காணி பதிவுகளை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி மக்களின் காணிகளை பறிமுதல் செய்வதற்கு அரசு முயற்சிக்கிறது. தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லா பிரச்சினை. வாழ வீடுகள் இல்லாமல் எத்தனை மக்கள் மர நிழல்களில் வாழ்கின்றார்கள்? எமது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றினைய வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • மூதூர் அமுதன் Monday, 26 September 2011 02:23 AM

    ஐயா நீங்கள் தானே கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய போது அரசுக்கு பாராட்டு தெரிவித்திர்கள். இப்போது என்ன இராணுவ கெடுபிடி என்று புதிய கதைவிடுகின்றீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X