Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 25 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். குடாநாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாகவும் சமூக மற்றும் கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று ஈ.பி.டி.பியின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் யாழ்.பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவிற்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் யாழ்;.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), யாழ். மாநகர பிரதிமுதல்வர் இளங்கோ (றீகன்), வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரகுருமூர்த்தி, ஆகிய உயர்மட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இக்கலந்துரையாடலில் குடாநாட்டில் பரவலாக இனந்தெரியாத நபர்களினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்கள் மற்றும் பாடசாலைகள் மாணவிகள் மீதான வன்முறைகள், சமூக விரோத செயற்பாடுகளான கசிப்பு உற்பத்தி போதைப்பொருள் விற்பனை கொலை மற்றும் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தல் சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகளை கட்டுப்படுத்துதல், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துதல், யாழ்.குடாநாட்டில் நிலவுகின்ற அசாhதாரண சூழ்நிலையை முடிவிற்கு கொண்டு வந்து நிலையானதும் அமைதியானதுமான ஓர் சூழ்நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை நாவாந்துறை, பாசையூர், கொக்குவில் ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போன்று தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பாகவும் ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது மாவட்டம் தழுவிய ரீதியாக ஏழு பொலிஸ் கண்காணிப்பு அணிகளை நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இதன் மூலம் பிரதேசங்களில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் பிரதேச மட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்து ஒன்றிணைப்பதன் ஊடாக குற்றச்செயல்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்வாறான கலந்துரையாடலை மாதந்தோறும் நடாத்தி பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025