Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து கைதியொருவர் பொலிஸாரல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட யாழ்.சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை முதல் தமது பகிஷ்கரிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டத்தரணிகள் முன்னிலையில் பொலிஸாரால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் கடந்த 20ஆம் திகதி முதல் தமது பணிகளைப் பகிஷ்கரித்து வந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் நேற்று நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமது பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக யாழ்.சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் திருமதி சாந்தா அபிமான சிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025