Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கோண்டாவில் கிழக்கு, கோட்டைக்காடு மயானக் காணி அயலில் உள்ள தோட்ட உரிமையாளர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக மயானத்தைப் பயன் படுத்துபவர்களும் மயான அபிவிருத்திச் சபையும் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கடந்த பல வருடங்களாக இம்மயானம் குறிப்பிட்ட பகுதி மக்களினால் மட்டும் பாவனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மயானம் சுமார் ஐந்து பரப்புக்கு உட்பட்ட காணியைக் கொண்டுள்ள போதிலும் தற்போது சுமார் இரண்டு பரப்புக்கு உட்பட்ட காணியே மயானப் பாவனைக்கு உரிய முறையில் காணப்படுவதாகவும் ஏனைய காணிகள் அயலில் உள்ள காணிக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.
இது சம்பந்தமாக கடந்த காலத்தில் மயான அபிவிருத்திச்சபை நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் அதனையிட்டு உரிய முறையில் கவனம் எடுக்கப்படவில்லையெனவும் தற்போது பொது மக்களின் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி சபையின் தலைவருக்கு மயான அபிவிருத்திச் சபையால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
neethan Friday, 30 September 2011 08:04 PM
மயான காணியையுமா ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர் மாக்கள், அவர்களுக்கு மயானம் தேவையில்லையோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025