Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பெண்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியலில் ஈடுபடுவதோடு கிராமங்களில் இயங்கி வரும் சங்கங்களிலும் தம்மை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக பொருளியல்துறைப் பேராசிரியர் வி.சிவநாதன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை அதிகரிக்கும் நோக்குடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி நிலையம் அரசியல் கருத்தரங்கு ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை இராமநாதன் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொண்டு, 'தேர்தல் பிரசார யுத்திகளை முன்னெடுக்கும் வழிமுறைகள்' என்ற தொனிபொருளில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல்வாதிகள் கிராம மட்டத்திலுள்ள சங்கங்களின் ஊடாகவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வாக்குகளைப் பெறுகின்றனர். அத்தகைய சங்கங்களில் பெண்கள் உறுப்பினர்களாக தம்மை இணைத்துக் கொள்வதன் மூலம் தமது உரிமைகளை பாதுகாத்துகொள்ள முடியும்.
அத்தோடு, தமது தேவைகளை இலகுவாகப் பெற்றுகொள்ளவும் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் தமது பலத்தை அதிகரிக்க அரசியலில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
தீர்மானங்கள் எடுக்கப்படும் இடங்களில் பெண்களின் கருத்துக்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அந்த இடங்களில் பெண்கள் தமது உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் உறுப்புரிமை மிக முக்கியம். நாடாமன்றத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெண்கள் தமது உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் உரிமைகளை மறுப்பவர்களை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும். சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவும் பெண்கள் முன்வர வேண்டும். பொது நிகழ்வுகளில் பெண்கள் தமது ஆளுமையை வெளிக்காட்ட முன்வர வேண்டும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago