2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் சொத்து விபரங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முதல் தங்களது செத்து விபரங்களை ஒப்படைக்குமாறு யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ. கருணாநிதி பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்.உதவித் தேர்தல் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள், தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை தங்களது செத்துக்கள் பற்றிய விபரங்களை ஒப்படைக்கவில்லை எனவும் எதிர்வரும் 25 ஆம் திகதி தான் அதற்கான இறுதி திகதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தோடு உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்களது அசையும், அசையாச் சொத்துக்கள் வங்கியில் நடைமுறை  கணக்குகளின் விபரம் மற்றும் நிலவுரிமைச் சொத்துக்கள் என்பது பற்றிய விபரங்களை கொடுக்க வேண்டும்.

இந்த விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவம் யாழ்.உதவித் தேர்தல் திணைக்களத்தில் உள்ளது எனவும் இதுவரை விபரங்களைக் கொடுக்காதவர்கள் அந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X