2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்களின் பகிஷ்கரிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் யாழ். கல்வி சமூகப்பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றுடன் முதல் தமது வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

யாழ்; பல்கலைக்கழக மாணவர் சமூகம் கடந்த 10 நாட்களாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தெடர்பாக மாணவர் ஒன்றியம் இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'கடந்த 17.10.2011 முதல் மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போரட்டமானது இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் யாழ். கல்வி; சமூக பிரதிநிதிகள் குழு மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு வேண்டு கோளை விடுத்திருந்தது.

அதாவது, மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை இடைநிறுத்தி விரிவுரைகளுக்கு செல்லுமாறு கோரி இருந்ததற்கு அமைவாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவும், எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர் பகிஷ்கரிப்பால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு யாழ்.கல்வி; சமூக பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததினாலும், எமது விரிவுரை பகிஷ்கரிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

எனவே எதிர்வரும் 31 ஆம் திங்கட் கிழமையில் இருந்து மாணவர்களை விரிவுரைகளுக்கு சமூகம் அளிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு எமது பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாணவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X