Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
"ஏனைய மாவட்டங்களை விட யாழ். மாவட்டத்தை அபிவிருத்தியில் துரிதப் படுத்துவதே எமது தலையாய கடமை. யாழ்.நகரப்பகுதியை 2012ஆம் ஆண்டில் துரித அபிவிருத்தியடைந்த ஒரு பிரதேசமாக மாறும், மாற்றிக் காட்டுவேன்" என யாழ். மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 2012 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநாகர சபையின் எதிர்வரும் 2012ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மாநாகர சபை உறுப்பினர்களின் முன் மொழிவுகளுக்கு ஏற்பவும் அவர்களின் பிரதேச வாரியான நிலை அபிவிருத்திக்கு ஏற்பவும் தயாரிக்கப்படும்.
ஏனைய மாவட்டங்களை விட யாழ். மாவட்டத்தை அபிவிருத்தியில் துரிதப் படுத்துவதே தங்களின் தலையாய கடமை என தெரிவித்த அவர், மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள், உறுப்பினர்களின் வேண்டுகோள்கள் மற்றும் முன் மொழிவுகளுக்கு அமைவாக நீதியான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நகரின் அபிவிருத்தியில் அனைவரையும் ஒன்றினைக்கவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
alruby Thursday, 15 December 2011 08:37 PM
நல்லது நடக்கட்டும் ....................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago