Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பொதுநூலக கட்டிடத்தை வடிவமைத்த மறைந்த கட்டடக்கலை நிபுணர் வி.எஸ்.துரைராஜாவின் நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை பொது நூலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்ரிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் காலமான கட்டடக்கலை நிபுணர் துரைராஜாவின் அஞ்சலிக் கூட்டம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர், அவுஸ்திரேலியாவில் அன்னார் வசிக்கும்போது எமது மாநகரசபைக்கு 1500 பேர் அமரக்கூடிய மண்டபம் ஒன்று அமைப்பதற்குரிய வரைபடத்தை அவருக்கு அனுப்பியபோது அதனை திருத்தி அனுப்பிவைத்தார்.
இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் கட்டடக்கலைத் துறையில் சிறப்பான பணியாற்றியவர். யாழ். மாவட்டத்தில் முக்கிய கட்டடங்களான யாழ். பொதுநூலகம், தந்தைசெல்வா நினைவுத்தூபி, வீரசிங்கம் மண்டபம், யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், விஞ்ஞானபீடம், நுண்கலைப்பீடக் கட்டடம், வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி, சுபாஸ் விடுதி, யாழ். சந்தைக் கட்டடம், துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றை வடிமைத்த நிபுணர் ஆவார்.
மேலும் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அமைப்புக்குழுவில் உறுப்பினராக இருந்து தனது இல்லத்தை இம்மகாநாட்டு செயலகமாகவும் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்திலும் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்பட்டவர்.
அவர் உயிருடன் இருந்தவரை அவரது சேவை யாழ். மக்களுக்கு கிடைத்தது என மாநகரசபை முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாநகரசபை ஆணையாளர், வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, மாநகர சபை ஊழியர்கள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago