2025 மே 17, சனிக்கிழமை

யாழ். கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நாயன்பார்கட்டு பகுதியில் பல கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவரும் பல வழங்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடம் 4 ஆடி நீளமுடைய வாளும் கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் அப்பகுதியில் கொள்ளை, களவு மற்றும் போதைப் பொருள் வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தங்களுக்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும் அவரைத் தேடிச் சென்ற போது அவர் தலைமறைவாகுவதாகவும் பொலிஸாரின் கண்ணில் படாதவாறு தனது இருப்பிடங்களை மாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நீண்ட 4 அடி நீளமுறைய கூரிய வாள் யாழ். பொலிஸாரினால் நாளை யாழ்.நீதிமன்றில் சான்றுப் பொருளாக காண்பிக்கப்படவுள்ளாதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .