2025 மே 17, சனிக்கிழமை

லலித், குகன் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டமைக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தலமையில் நடைபெற்றது. சுமார் 300 மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்.

சுமர் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்காக யாழ். பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .