2025 மே 17, சனிக்கிழமை

வீட்டுக் கதவை திருடியவர்கள் சிக்கினர்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வீட்டுக் கதவைத் திருடிக்கொண்டு வந்தவர்கள் உடுவில் பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஊழியர்களிடம் அகப்பட்டுக்கொண்டுள்ளனர்.

உடுவில் பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றுவது சம்பந்தமாக நேற்றிரவு பிரதேச சபைத் தலைவரும் ஊழியர்களும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வந்தனர்.  இதன்போது கதவை ஏற்றிக்கொண்டு வந்த லாண்ட் மாஸ்டர் சைக்கிளில் வந்த சிறுவன் மீது மோதியபோதிலும் அதனைக் கண்டுகொள்ளாது தப்பிச்சென்றது. இதனை அவதானித்த உடுவில் பிரதேச சபைத் தலைவரும் ஊழியர்களும் துரத்திச்சென்று லாண்ட் மாஸ்டரை பிடித்தனர்.

இந்த நிலையில் லாண்ட் மாஸ்டரில் வந்த மூவர் தப்பியோடினர். சாரதி பிடிபட்ட நிலையில் லாண்ட மாஸ்டருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .