Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 03 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிமேற்கு பிரதேச மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
அவ்வப் பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதன் மூலம் அம்மக்களின் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் திங்கட்கிழமை இச்சந்திப்பு வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அப்பகுதி மக்களால் பல்வேறு தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, வீட்டுத் திட்டக் கோரிக்கைகள் மற்றும் குறையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை முழுமையாக்கும் படியிலான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டன.
இம்மக்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன் உடனடியாகத் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார்.
இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), ஈ.பி.டி.பி.யின் வலிகாமம் இணைப்பாளரும் வலிமேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜீவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை யாழ் நாவற்குழி மகிந்தபுரம் வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்ளினது தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
44 minute ago
55 minute ago
3 hours ago