Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Super User / 2012 ஜனவரி 03 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஸ்ரான்லி கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இன்று செவ்வாய்கிழமை இரவு 8.15 மணியளவில் ஆறு பேர் கொண்ட கொள்ளையர் குழு கூரிய ஆயுதங்கள் சகிதம் கைக்குழந்தையை பணயம் வைத்து 3 இலட்சம் ரூபாவையும் 10 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகியுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கைக்குழந்தையுடன் தனிமையில் இருந்த பெண்மணியின் வீட்டுக்குள் உள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டில் உள்ள பணத்தையும் உடமைகளையும் தருமாறு அச்சுறுத்தியதுள்ளனர்.பணம் தர மறுத்தால் கைக்குழந்தையை வெட்டிக் கொலை செய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர்.
கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக குழந்தையின் தாயார் வீட்டில் உள்ள பணத்தையும் உடமைகளையும் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கைக்குழந்தையின் தலையில் வைக்கப்பட்டு இருந்த கூரிய ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை குழுவினர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் மூவர் வீட்டுக்குள் உள் நுழைந்து இருந்தனர். மற்றைய மூவர் வீட்டுக்கு வெளியில் மோட்டர் சைக்கிளில் காத்திருந்ததாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago