2025 மே 17, சனிக்கிழமை

லலித், குகன் காணாமல் போன விவகாரம்; அச்சுவேலி பொலிஸாரிடம் விசாரணை

Menaka Mookandi   / 2012 ஜனவரி 04 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோரின் விவகாரம் தொடர்பாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்.அச்சுவேலி பொலிஸாரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமை யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

லலித், குகன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அன்றைய தினத்தில் கடமையில் இருந்த அச்சுவேலி பொலிஸாரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காணாமல் போன மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் குகனின் மனைவி கொடுத்த வாக்குமூலத்திற்கு அமைவாக இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .