Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 06 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடகிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனத்தினால் (என்.ஈ.ஆர்.டி.ஓ) யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்படாத பிரதேசங்களிலுள்ள கடற்றொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக படகு, இயந்திரம், வலை உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்படாத வளலாய், பலாலி, மயிலிட்டி, ஊரணி, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இக்கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு இன்பரூட்டிப் பகுதியில் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago