2025 மே 17, சனிக்கிழமை

'அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு கனேடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்'

Super User   / 2012 ஜனவரி 09 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கையில் அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயம் இன்று திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்

யாழ். ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை மாலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சுங்ஸென் லியூங் மற்றும் ஜோன் டானியல் ஆகியோர் யாழ். ஆயரை சந்தித்து பேச்சு நடத்தினர்

இதன்போது யாழ். ஆயர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ். ஆயர்,

"இலங்கை அரசாங்கமானது யாழில் மீள்கட்டுமானங்களை செய்து வருகிறது. வீதி அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் போன்ற நல்ல விடையங்களை எல்லாம் செய்து வருகிறது. இது வரவேற்றகத்தக்கது

30 வருட காலமாக செய்யப்படாத வேலைத்திட்டங்கள், அலுவல்கள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், மக்களின் மனங்களில் அமைதியில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுகளில் மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இன்றி இருக்கிறார்கள்.

யாழில் படித்த வாலிபர்களுக்கு வேலையில்லை. அவர்கள் வேலை செய்வதற்குரிய தொழிற்சாலைகளை யாழில் கனேடிய அரசு நிறுவ வேண்டும். யாழில் சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும்" என கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 10 January 2012 05:50 AM

    ஆயரே யாழில் மட்டும் படித்த வாலிபர்களுக்கு வேலை இல்லா நிலைமை இல்லை நாடு முழுவதுமே நிலைமை அதுதான், சிறுபான்மை படித்தவர் நிலைமை காட்டமாக உள்ளது. தாங்கள் யாழ் ஆயர் என்பதனால் அங்குள்ளவர்களினது நிலைமை பற்றி பேச மட்டுமே அனுமதி உள்ளதோ? எந்த வகையான அரசியல் தீர்வு என்பது பற்றியும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சொல்லுங்கள்.

    Reply : 0       0

    ummpa Wednesday, 11 January 2012 05:29 AM

    எனது கருத்து தப்பு என்றால் மன்னிக்கவும், போராட்டம் , கொலைவெறி தாண்டவம் , மக்களை வெளியேற்றம் இப்படி பல ஆயிரம் நிகழ்வுகள் உங்களை சுற்றி நடந்தது . அந்தவேளை நீங்கள் எல்லாம் சும்மா கருத்து தெரிவிதுக்கொண்டுதான் இருந்தீர்கள் . நீங்கள் எல்லாரும் இருபதுவருடதுக்கு முதல் இதுபற்றி நன்றாக சிந்தித்து இருந்தால் அன்று தீர்வு பெற்று கொடுதிருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .