2025 மே 17, சனிக்கிழமை

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 17 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்தினை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் கலந்தாலோசிக்காது தயாரித்தமை மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய் கிழமை யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்.ப்லகலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தங்களது போராட்டம் அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழகத்தில் முன்னேடுக்கப்படுவதாகவும் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .