2025 மே 17, சனிக்கிழமை

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட முடிவு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 17 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் குடும்ப வன்முறைக்கு எதிராக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு தங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளதாக யாழ்.மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் குடும்ப வன்முறைகளின் காரணமாக பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் பெண்கள் உளநெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களின் உரிமைகளைப் பேணுவதற்காகவும் அவர்களுக்கான ஆலோசனை வழங்குவதற்கு யாழ்.மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிலையம் முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப வன்முறைகளின் பாதிப்படையும் பெண்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறையிட்டு சமரசத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ்.பெண்கள் அபிவிருத்தி நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி சரோஜினி சிவச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .