Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 19 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் பராமரிப்பு மருத்துவ சேவைப்பிரிவு, இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு, வைத்தியர் விடுதி ஆகியவற்றுக்கு கட்டிட வசதிகள் தேவைப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிகளவான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் நிலையில், வைத்தியசாலைக்கு கட்டிட வசதிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை ஓரளவு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த வருடம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு 92 தாதிமார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் யாழ். மக்களுக்கு மேலும் சிறந்த மருத்துவ, சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க முடியும் எனவும் வைத்தியர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025