2025 மே 17, சனிக்கிழமை

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் பிரதேச சபைகள் என்பன  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக யாழ்.பிராந்திய சுகாதார நிலையம் அறிவித்துள்ளளது.
 
இதனடிப்படையில்  யாழ். ஊர்காவற்றுறை சுகாதாரத் திணைக்களமும், வேலணை பிரதேச சபையினரும் இணைந்து மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பாக மக்கள மத்தியில் விழிப்புணர்வுகளை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பரவக் கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு அவற்றை துப்புரவு செய்யுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்படுவதுடன், இதனை மீறுவோர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .