Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 23 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ந.பரமேஸ்வரன்,கவிசுகி)
உங்களது நாட்டை வளமானதொரு நாடாக மாற்றுவதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இன்று திங்கட்கிழமை உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'மாணவர்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக மனநிலையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
எனது கணித பாடத்திற்கான ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் 1941ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் கல்வி கற்றபோது கனகசுந்தரநாத் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவ் ஆசிரியர் எனக்கு இலவசமாக கணித பாடத்தை கற்பித்தார். அவரிடமிருந்து நான் நல்ல பழக்கவழங்களைக் கற்றுக்கொண்டேன்' என மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, யாழ். இந்தியத் தூதுவ அதிகாரி எஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதானகே, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
abduljaleel Monday, 23 January 2012 08:40 PM
சலாம்!
வா மனிதா வா! உன்வதனத்தில் தோன்றுது ஒரு பணிவு. இந்தியாவுக்கு நீ ஒரு முழுநிலவு.
"எனது தாய்" என்ற தலைப்பில் நீ எழுதிய வரிகள் எங்களை கண் கலங்க வைக்கின்றன. உனது வாழ்நாட்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி வைப்பானாக.
Reply : 0 0
Raj Ratnam Tuesday, 24 January 2012 01:04 AM
யாருடன் எதற்கு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பதயும் சொன்னால் நல்லது பெரியவரே.
Reply : 0 0
Raj Ratnam Tuesday, 24 January 2012 01:13 AM
யாருடன் எதற்கு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பதயும் சொன்னால் நல்லது பெரியவரே.
நிலைமையினை அறிந்து பேசவும்.
Reply : 0 0
Sinniah Tuesday, 24 January 2012 04:13 AM
அவர்கள் தங்கள் பிறந்த பூமியை தாங்களே ஆளும் உரிமை பெற்றால் நீங்கள் புத்திமதி சொல்லத் தேவை இருக்காது .
முடிந்தால் தமிழர் உரிமை பெற அரசை வற்புறுத்துங்கள் .
அறியாமல் அவர்கள் வலையில் வீழ்ந்தீரோ ஐயோ பாவம்
Reply : 0 0
ummpa Tuesday, 24 January 2012 05:13 PM
நீங்கள் வந்த பயணம் அரசியல் இல்லை என்பது புரியும் இருந்தும் உங்களின் கருத்துக்கு "உங்களது நாட்டை வளமானதொரு நாடாக மாற்றுவதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்" அதக்கு பதில் உங்களுக்கு தெரியவில்லை என்பதை இட்டு கவலைப்படவேண்டி உள்ளது. ஏனென்றால் முதல் எனது வீடு நிம்மதி அடையும் போதுதான் எனது கிராமம், பிரதேசம், மாவட்டம், மாகாணம் அடுத்து நாடு பற்றி சிந்திக்கமுடியும். ஆகவே உங்களின் கருத்து "உங்களது நாட்டை வளமானதொரு நாடாக மாற்றுவதற்கு உடன் தீர்வைக்கொடுங்க அப்போது நிட்சயம் இந்த மக்கள் ஒத்துழைப்பார்கள் " கூறி இருந்தால்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025