2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 26 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபை மேயர் பற்குணராசா யோகேஸ்வரியின் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகாரப் போக்குகளைக் கண்டித்து யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்துள்ளனர்.

இந்த வெளிநடப்பில் யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மங்களநேசனும் இணைந்துகொண்டுள்ளார்.

யாழ். மாநகர சபையில் தங்களது கருத்துக்கு மதிப்பளிக்காமை, சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடியாமை ஆகியவற்றைக் கண்டித்தே வெளிநடப்புச் செய்துள்ளதாக யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.றெமிடியாஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .