2025 மே 16, வெள்ளிக்கிழமை

'யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை'

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதனை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் குறித்து சசுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேNயு அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.

யாழ். மக்களின் சுகாதார சேவைகளை திருப்திகரமாக செய்வதற்கு போதிய ஆளணி பிரச்சனைகள் இருப்பதாகவும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

யாழ். வைத்தியசாலைகளின் நிலவும் இந்த ஆளணி பிரச்சகைகள் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .