2025 மே 17, சனிக்கிழமை

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் சந்ததியினர் யாழில் உருவாக வேண்டும்: யாழில் ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                (கவிசுகி)

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இன்று திங்கட்கிழமை  திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த நாட்டின் எதிர்காலத்தினை பொறுப்பேற்று வழிநடத்தப் போகின்றவர்கள் நீங்கள் தான்.

உங்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள வசதி வாய்ப்புக்கள் கிராமப்புற பாடசாலைகளிலும்  செய்து கொடுக்கப்படுகின்றன.

கடந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளில் கிராமப்புற பாடசாலைகளே முன்னிலையில் உள்ளன. கொழும்பில் உள்ள பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதி வாய்ப்புக்களும் கிராமப்புற பாடசாலைகளில் ஏற்படுத்திக் கொடுத்து அந்த மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது நமது கடமை.

இந்த யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவரான டக்ளஸ் தேவானந்தா இன்று அமைச்சராக இருக்கிறார். இவரைப் போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்' என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தமிழில் உரையாற்றுகையில்,

'உங்கள் பகுதியில் நீச்சல் தடாகம் உள்ள ஒரேயொரு பாடசாலை என்றால் அது உங்களுடைய மத்திய கல்லூரி தான்.

உங்கள் பகுதியில் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும். நீங்கள் சர்வதேசத்தில் சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய பெற்றோர்களை மறந்து விடாதீர்கள் அதேபேல் இந்த நாட்டையும் மறந்து விடாதீர்கள். நல்ல மனிதநேயமிக்க மாணவர் சமுதாயம் யாழ். மண்ணில் உருவாக வேண்டும்.

இன்றைய மாணவர்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகின்றவர்கள். இதற்கு அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Monday, 06 February 2012 07:25 PM

    முதலில் உங்கள் அமைச்சரவையினுள் உருவாக்குங்கள் .

    Reply : 0       0

    ummpa Monday, 06 February 2012 07:43 PM

    மதிப்புக்குரிய சனாதிபதி அவர்களே! நீங்கள் மனித நேயமிக்கவர் ஆனால் சுற்றுவட்டம் உங்களை நேயத்தை எடுத்துவிட்டார்கள் இருந்தாலும் நாங்கள் உங்களை இலங்கை நாட்டின் அதி உத்தம முழு அதிகாரம்கொண்ட சனாதிபதி என்பதக்கு எனது வாக்கு சான்று . நீங்கள் நாட்டைப் பிரித்து கொடுக்கதேவை இல்லை இப்போது தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்கின்ற தீர்வு அவர்கள் அவர்களை ஆளவேண்டும் என்பதுதான். அது உங்களால் தனிப்பட்ட முடிவு. உங்களின் முடிவு ஒரு சரித்திரமாக வேண்டாமா! அப்படி உங்களின் முடிவை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் யார்?

    Reply : 0       0

    ummpa Monday, 06 February 2012 07:49 PM

    தனிப்பட்ட தீர்வு ஒரு வருட காலத்துக்குத்தான் செல்லுபடியாகும். அந்ததீர்வு சரியாக பின்பற்றாமல் அல்லது வேறு விதமாக செயல்படுத்தப்படுமானால் உங்களின் அதிகாரம் இருக்கிறது அதனை இல்லாமல் ஆக்குவதக்கு. எனவே மிகவும் அன்புடன் யுத்தத்தை வென்ற நீங்கள் ஏன் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களின் மனதை வெற்றிகொள்ள வேன்டாமா?

    Reply : 0       0

    thivaan Tuesday, 07 February 2012 02:40 AM

    யாழில் உள்ள எல்லா கல்லுரி மாணவ மாணவிகள் மத்திய கல்லூரிக்கு வாங்க நீச்சல் அடிக்க.

    Reply : 0       0

    kundaanthady Tuesday, 07 February 2012 01:03 PM

    சாதாரண பாடசாலை பரிசளிப்பு விழாவிலேயே தமிழ் மொழியில் தேசியகீதம் பாட ஆளுநர் உத்தரவு கொடுக்க வேணும் ....பிறகு எப்படி நீங்கள் இதனை கூறலாம் ..... படித்தவர்கள் யோசித்து முடிவெடுப்பார்கள் ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .