2025 மே 17, சனிக்கிழமை

ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை த.தே.கூ. புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                (கவிசுகி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திர தெரிவித்தார்.

வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வது குறித்து கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

தங்களுக்கு உரியமுறையில் அழைப்பு விடுக்கப்படாது நடத்தப்படும் இந்த வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

'வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கமாட்டாதென்று திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை நாம் புறக்கணிக்கின்றோம்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக அதுவும் ஜனாதிபதி பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து கூட்டம் நடப்பதற்கு முதல் நாளான நேற்று மாலையே தொலைபேசி மூலம் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
 
எமது கௌரவத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம். அழையாத விருந்தினராக நாங்கள் செல்லமாட்டோம். முறைப்படி அழைப்பு விடுக்கப்படாமையினால் நாங்கள்  இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டோம். இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக உள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • kamran Monday, 06 February 2012 07:44 PM

    தமிழ் மக்களுக்கு தீர்வு TNA மூலம் வராது என்பது இன்னும் அண்ணன் சுரேஷிற்கு புரியவில்லை போலும்.

    Reply : 0       0

    neethan Monday, 06 February 2012 07:51 PM

    வடபுல மக்களின் பெருன்பான்மை ஆதரவை பெற்றவர்கள் நீங்கள், நாட்டின் 58% மக்களின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி அவர், உங்களது மாகாண மக்களின் அபிவிருத்தி பற்றி கூட்டம் நடத்தும் போது வறட்டு கௌரவத்தினால் பகிஸ்கரிப்பது,அல்லலுறும் உங்களது மக்களுக்கு செய்யும் துரோகம் என எண்ணவில்லையா? சிலவேளை நாடு கடந்த தமிழீழ ருத்ர குமார் சொல்லியிருந்தால் அழைப்பில்லாவிட்டாலும் சென்று இருப்பீர்களோ ?

    Reply : 0       0

    ummpa Monday, 06 February 2012 08:03 PM

    உங்களுக்கு வெற்றிலை உடன் வந்தால்தான் நீங்கள் போவீர்கள். நீங்கள் பாவிக்கும் அனைத்தும் அரசிடமிருந்துதான் உங்களுக்கு கிடைக்கிறது. மக்களின் தேவை இருக்கும்போது அழையாத விருந்தினராக சென்று இருக்கவேண்டும். நீங்கள் முற்று முழுக்க கடந்த 50 வருடமாக இதைத்தான் செயல்படுத்திக்கொண்டு மக்களை துன்பப்படவைத்து குளிர்காய்ந்துகொண்டு இருக்கிறீர்கள். இந்த வருடம் பிறந்து 37 நாட்கள் கடந்துவிட்ட நாட்களை தினமும் கடந்துகொண்டு இருக்கும்போது உங்களின் திட்டம் என்ன? வடகிழக்கு மக்களுக்கு உங்களால் தெரியப்படுத்த முடியுமா?

    Reply : 0       0

    KD Monday, 06 February 2012 11:27 PM

    குமரன், நீதன் அவர்களே !

    நீங்கள் இருவரும் அழைக்காத வீட்டுக்குச் சென்று மூக்குமுட்ட அமிக்கி திண்பீர்கள் போல. தன்மாதம் இல்லாமல் கதைக்க வேண்டாம். தமிழன் என்றால் அவனுக்கு என்று ஒரு கௌரவம் இருக்கிறது

    தமிழ் மக்களுக்கு என்னத்தை உங்கட ஜனாதிபதி கொடுத்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

    இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் என்ன நடந்தது என்று தெரியுமா? வெளிநாட்டவர்கள் தங்கள் பணத்தில் கட்டிக் கொடுத்து திறந்து வைத்த சாவகச்சேரி வைத்திய சாலையை உங்கள் ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இந்த உண்மை உங்களுக்கு எங்க புரியப் போகிறது

    Reply : 0       0

    thivaan Tuesday, 07 February 2012 02:31 AM

    அழைப்பு இல்லாமல் போற ஒரு இடம் மரணவீடு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .