2025 மே 17, சனிக்கிழமை

யாழ். நாவாந்துறையில் பௌத்த சிலை உடைத்து கொள்ளை

Kogilavani   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.நாவாந்துறை கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள பௌத்த சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் பணமும்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது இன்று புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளதாகவும் பௌத்த சின்னத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதோடு அதற்குள்  இருந்த உண்டியல் பணம் கொள்ளையர்களினால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .