2025 மே 17, சனிக்கிழமை

கொலைக் குற்றச்சாட்டில் கைதான நபர் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மேல்நீதிமன்றத்தினால் நேற்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேக நபர் கடந்த வருடம் பொன்னம்பலம் விஜயரெட்ணம் என்பவரை கொலை செய்தார் என்ற குற்றசாட்டிலும் பெண்மணி ஒருவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலும் கிளிநொச்சி பொலிஸாரினால் பூநகரிப் பகுதியில் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இச்சந்தேக நபர் தொடர்பில் அவரது சட்டத்தரணி பிணை மனுவை மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பிணை மனுவை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம்,  அவரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .