2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு லிப்ற் வசதிக்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு லிப்ற் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை உப பணிப்பாளர் வைத்தியர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார். 

இவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு லிப்ற் வசதியில்லாமல் நோயாளர்களை காவிக்கொண்டு மேல்மாடிக்கு செல்வது ஆபத்தான விடையமாக உன்னது. இதனால் ஊழியர்கள் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மின்சார சபைக்கு 81 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு ஒருவருடாகியும் அந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லை.

இதனால் அண்மையில் மின்சக்கி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க யாழ்.விஜயம் மேற்கொண்ட போது இவ்விடையம் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது

இதன்பின்பு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு லிப்ற் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .