Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பெரிய அளவிலான கடற்றொழில் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலமே யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடபிராந்திய நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜஸ் கட்டிகளின் விற்பனை விலை கூடுதலாகக் காணப்படுவது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
'யாழ்ப்பாணத்தில் சிறிய அளவில் ஜஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்ற காரணத்தினால் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளில் 50 கிலோ ஐஸ் கட்டி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற 25 கிலோ ஐஸ் கட்டியானது 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. குறைந்தளவான உற்பத்தியால் உற்பத்தி செலவு அதிகரித்து இருப்பதே இதற்குரிய காரணம் ஆகும். பெரிய அளவிலான ஐஸ் கட்டி உற்பத்தியை மேற்கொள்வதன் மூலமே மலிவான விலையில் விற்க முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025