2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.குடாநாட்டு உணவகங்களுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் உணவு கையாளும் நிலையங்களுக்கான தரச் சான்றிதழ்களை எதிர்வரும் மார்ச் மாதம் வழங்கி தரமானதும் சுகாதாரமான உணவுகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். குடாநாட்டில் உள்ள உணவு கையாளும் நிலையங்களான உணவகங்கள், தேநீர் சாலை, உணவுத் தொழிற்சாலைகள், பேக்கறிகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றிற்கு ஏ.வி.சீ.டீ என்ற தரச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த தரச்சான்றிதழ் இல்லாத உணவுகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உணவு கையாளும் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தரச் சான்றிதலைப் போல் எதிர்காலத்தில் பலசரக்கு கடைகளுக்கும், பெட்டிக் கடைகளுக்கும் இந்த தரச்சான்றிதழ்கள் வழங்குவதற்கு நடடிக்கை எடுக்கப்படும்.

யாழ்.குடாநாட்டில் உள்ள 12 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையூடாக உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு இந்த தரச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

பொதுமக்கள் இந்த தரச்சான்றிதழ்கள் உள்ள உணவகங்களில் தங்களுக்கு தேவையான சுகாதார முறையிலான உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .