Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாநாகர சபையின் 2012 ஆண்டுக்கான 2ஆவது கூட்டத்தொடர் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பிக்கப்படவுள்ள 2ஆவது கூட்டத் தொடரில் யாழில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள், கட்டுமாணப் பணிகள், போக்குவரத்து, வீதி அபிவிருத்தி மற்றும் சோலை வரிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள யாழ்.மாநகர சபையின் 2ஆவது கூட்டத் தொடரை பகிஸ்கரிக்க முடிவு செய்துள்ளதாக யாழ். மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் சட்டத்தரணி மு.றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையில் தங்கள் கருத்துக்கு யாழ்.மாநகர முதல்வர் மதிப்பு அளிக்காமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் அவரின் சர்வதிகாரப் போக்கு காரணமாகவே தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் யாழ்.மாநகர சபையின் 2ஆவது அமர்வை பகிஸ்கரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ahamed Thursday, 23 February 2012 04:16 AM
சிறந்தது. ஆனால் தொடர்ச்சியாக வேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025