2025 மே 17, சனிக்கிழமை

யாழில் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: சமன் சிகேரா

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

 

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழில் போதைப் பொருள் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் யாழில் முழுமையான போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டு போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேவேளை கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டள்ளார்.

யாழ்.நகரப்பகுதியில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக சில முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .