Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அரச வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் பலர் பொதுமக்களுக்கு அரச கரும செயற்பாடுகளை செய்வதற்கு ஆர்வமற்றுள்ளனர் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
யாழ். வேம்படி மகளிர் பாடசாலையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வடமாகாண அரச அதிகாரிகளுடன சந்திப்பிலே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'அரச அதிகாரிகள் தங்கள் பொறுப்புக்களை தலமைத்துவப் பண்புகளுடன் அரச சேவையை மக்களுக்கு ஆற்ற வேண்டும். முழுமையாக யுத்தப்பாதிப்புக்களுக்கு உட்பட்ட மக்கள் அந்த மக்களின் வாழ்வாதராத்தை மட்டுமின்றி அவர்களுக்கு அரசு செய்யும் உதவிகள் பாரமட்சமின்றி கிடைப்பதற்கு ஆவணம்செய்ய அரச அதிகாரிகள் முன்வரவேண்டும்.
அரசின் மீதும் அரசின் செயற்பாடுகளிலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடியவர்கள் அரச அதிகாரிகள். பொதுமக்கள் அரசின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முன்வருமாறு கேட்டுள்ளார்.
வடமாகாணத்தில் அரச சேவையில் முதல் நிலையில் இருப்பவர்கள் யாழ்.மாவட்ட அரச அதிகாரிகள் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என்றார்.
இந்த அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலளர் திருமதி விஜயலட்சுமி ராமேஸ் மற்றும் வடாமாகாண சபை உயர் நிலை அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
1 hours ago
3 hours ago