Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்லாமல் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக பிரபல சட்டத்தரணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை எதிர்கட்சி தலைவருமாகிய முடியப்பு றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றும் போது இவ்விதமாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக சர்வதேசம் திரும்பியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் சுமந்திரனும் சேர்ந்து எடுத்த முடிவானது தமிழ் மக்களுக்கு இவர்கள் யார் என்பது மிகத் தெளிவாக புலப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் சம்மந்தரும் சுமந்திரனும் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை அரசின் கைப் பொம்மைகளாக செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்களத்தின் குகைக்குள் கிழசிங்கமும் இளசிங்கமும் புகுந்துள்ளதாகவும் இனி தமிழ் மக்களுக்கு இவர்ளால் எதுவும் செய்யமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ibnuaboo Wednesday, 29 February 2012 02:04 AM
மிகச் சிறந்த சாணக்கியமான தீர்மானத்தை டி.என்.ஏ. எடுத்திருப்பது எதிர்காலத்தில் தமிழ் இனம் மீதான நீங்கா பழியொன்று ஏற்படாவண்ணம் பாதுகாத்திருக்கிறது. மீதமுள்ள தமிழ் இனம் இனி சகல மக்களுடனும் கலந்து எங்கள் நாடு இது என்ற தேசிய நீரோட்டத்தில் கலந்து தமிழ் ஈழம் என்ற கற்பனா வாதத்தை மறந்தால் அமைதிக்கு வலி பிறக்கும்.
Reply : 0 0
hameed Wednesday, 29 February 2012 04:40 AM
இது நல்ல முடிவாகேவே தென்படுகிறது.
Reply : 0 0
raj Wednesday, 29 February 2012 09:06 AM
இது முதலே எதிர் பார்த்ததுதான். இவர்கள் போனாலும் தமிழர்க்கு எதிராகத் தான் வேலை செய்வினம். பல ஆயிரம் தமிழ் மக்கள் ஜெனீவா நோக்கி படை எடுக்கிறார்கள். இவர்கள் தமிழர்க்கு எதிராக ஏதும் கதைத்து அதனால் ஏதாவது விளைவுகள் வருவதிலும் பார்க்க இது நல்லதுக்கே. சம்பந்தனின் முகமூடியும் கிழிந்தது. லண்டனில் இறுதி ஆங்கிலேய பா.உ கள் மூவர் கூட ஜெனிவாவுக்கு தமிழர் சார்பில பிரச்சாரம் செய்ய போகிறார்கள்.
Reply : 0 0
neethan Wednesday, 29 February 2012 06:07 PM
இலங்கை அரசுக்கு கூட்டமைப்பின் ஆதரவு அவசியமற்றது, 30 வருட ஆயுத போராட்டத்தில் கண்ட பலன் பெறுமதி மதிப்பிட முடியாத மனித உயிர்களின் இழப்பும்,சொத்து அழிவுமே நீதமாக சிந்திப்போர் புரிந்துகொள்வர், வசதி படைத்தோர் புலம் பெயர்ந்து வாழ்வை வளமாக்க ஏனையோர் துயர வாழ்க்கை இது தான் நிதர்சனம்,விட்டுகொடுப்பு, பேச்சுவார்த்தை மூலம் விடியலை நோக்கி பயணிப்போம்.வீர வசனங்கள் வேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago
3 hours ago