2025 மே 17, சனிக்கிழமை

நீதிமன்றத்தில் சிரித்துக்கொண்டிருந்த நபருக்கு நீதவான் எச்சரிக்கை

Kogilavani   / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக சிரித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா கடுமையான எச்சரிக்கை செய்து விடுதலை செய்துள்ளார்.

இந்நபரை, நீதிபதி உடனே அழைத்து வரும்படி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததும் அவர் உடனே கைது செய்யப்பட்டு  நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இனி இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் எனவும் அவ்வாறு மீறி நடந்தால் தண்டனை கடுமையாக இருக்கும் எனவும் நீதிவான் எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .