2025 மே 17, சனிக்கிழமை

கடல் உணவுகளை பதப்படுத்துவதற்காக யாழ்.தாளையடியில் மிகப் பெரிய ஜஸ் உற்பத்தி நிலையம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.தாழையடி பகுதி கடற்றொழிலாளர்களின் கடல் உணவுகளை  பதப்படுத்துவதற்காக 2 மில்லியன் ரூபா செலவில் ஜஸ் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வள  திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்த ஜஸ் உற்பத்தி நிலையமானது அப்பகுதி கடற்றொழிலாளர்களின் கடல் உணவுகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்படுவதுடன்  இதன் மூலமாக சுமார் 1500 கடற்றொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.

வடபகுதியில் அமைக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் அமைப்பைக் கொண்ட இந்த ஜஸ் உற்பத்தி நிலையமானது யாழ்.மாவட்டத்தில் மிகப் பொரிய ஜஸ் உற்பத்தி நிலையமாக அமையுமென அத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .