2025 மே 17, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் சுமந்திரன் எம்.பியின் கொடும்பாவி

A.P.Mathan   / 2012 மார்ச் 01 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று யாழ். பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. “தமிழின துரோகி சுமந்திரன்“ எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் “போர் குற்ற விசாரணை எங்கே?“ எனக் கேள்வியும் கேட்கப்பட்டிருக்கிறது.

படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருக்கிறது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனிடம் கேட்டபோது, “இது பல்கலைக்கழக மாணவர்களினாலேயே இது நடந்திருக்கிறது என நம்புகிறோம்..” என்று தெரிவித்தார். இலகுவில் எடுக்கமுடியத விதத்தில் உயர்ந்த கட்டடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தக் கொடும்பாவி நேற்று இரவு தொங்கவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதனிடையே கூட்டமைப்பினர் ஜெனிவாவிற்கு செல்வதில்லையென எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் இன்று காலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0

  • bzumar Thursday, 01 March 2012 03:41 PM

    மாணவர்களின் தலைவரை மீறி நடந்த செயலா? எதுவாக இருந்தாலும் வன்மமும், குரோதமும் விடிவை ஏற்படுத்தாது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

    Reply : 0       0

    Mohamed Thursday, 01 March 2012 04:09 PM

    ஐயோ ! உங்களின் பாடு அதோ கதிதான். ஜெனீவாவுக்கு போனால் "சம்பந்தன் புலிக் குழுவோடும் மேலை நாடுகளோடும் சேர்ந்து நாட்டில் பிரிவினைக்கு வழி கோருகிறார், சம்பந்தன் துரோகி" என்று சிங்களப் பத்திரிகைகள் பெரிய எழுத்துக்களில் செய்து போடும். இது இன்னும் தமிழ் மக்களை எதிரியாக காட்டும். அதை அரசாங்கம் நன்றாய் ஊதி வெடிக்க வைத்து நாடு பூராக ஆர்ப்பாட்டம் திசைதிரும்பும். ஜெனீவா போகாமல் விட்டால் பொம்மை கட்டுறாங்கள். எதை செய்றது ? எதை செய்யாமல் விடுவது? என்னதான் சொன்னாலும் தூர நோக்கு அவசியம்!

    Reply : 0       0

    KD Thursday, 01 March 2012 08:51 PM

    இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0

    Nishat Friday, 02 March 2012 01:28 AM

    கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .