Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 01 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
போருக்குப் பிந்திய சூழலில் தகைமை அபிவிருத்தி பன்னாட்டு ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழககத்தில் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்திய சூழலில் தகைமை அபிவிருத்தி பன்னாட்டு ஆய்வு மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று யாழ். பல்கலைக்கழககத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் போருக்குப் பிந்திய சூழலில் தகைமை அபிவிருத்தி பன்னாட்டு ஆய்வு மாநாடானது உள்ளூர் மற்றும் பன்னாட்டு சமூகங்களிலிருந்து முன்னணி ஆய்வாளர்களை ஒன்றிணைப்பதும் உயர் தரத்திலான புதிய ஆய்வு ஆக்கங்களை ஈர்ப்பதும், இந்த ஆய்வு மாநாட்டில் தொழில்நுட்பங்களை, அனுபவங்களை, எண்ணங்களை பகிர்ந்து ஆய்வு முடிவுகளை பரவலாக்குவதாகும்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கலந்து கொண்டு உரையாற்றும் போது,
போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ். சமூகங்கள் மத்தியில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகமும் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகமானது இலங்கையில் 10ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளது. இதேவேளை உலக பல்கலைக்கழககங்களின் தர வரிசைப்படி 90,000 பல்கலைக்கழகங்களில் 75,800 ஆவது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை போருக்குப் பிந்திய சூழலில் தகமை அபிவிருத்தி பன்னாட்டு ஆய்வு மாநாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிறிசற்குணராஜா கருத்து தெரிவிக்கும் போது...
தற்போது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியானது அரசியலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. அரசியல் செயற்பாடுகள் காரணமாக யாழில் முழுமையான அபிவிருத்தி இல்லை.
கருத்து சுகந்திரம் இல்லாத இந்த சூழலில் நாங்கள் ஆய்வு மாநாடு நடத்தவுள்ளோம். இது எமக்கு கிடைத்த வெற்றி. யாழில் புதிய சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் எந்தவிதமான கோணத்தில் வடிவத்தில் வரப்போகிறதோ தெரியவில்லை.
சிதறடிக்கப்பட்ட எமது சமூகத்தின் அறிவு மற்றும் ஆய்வு விருத்தியைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளோம்.
போர் சூழலில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்காக எடுக்கப்பட்ட இந்த மாநாடானது ஒரு தொடக்கப்புள்ளி எனவும் ஒரு கருக்கட்டல் செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.
முற்று முழுதாக கருத்து சுகந்திரம் மறுக்கப்பட்ட இந்த சூழலில் இந்த ஆய்வு மாநாட்டை முன்னேடுக்கின்றோம். பலரின் புதிய கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago