2025 மே 17, சனிக்கிழமை

இரத்தப் புடையன் பாம்பு தீண்டி இளம் குடும்பப் பெண் மரணம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 01 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சாவகச்சேரி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவரை இரத்தப் புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கச்சாய் வீதி, சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மஹிந்தன் தீபா (வயது 21) என்ற குடும்பப் பெண்ணே இன்று வியாழக்கிழமை காலை பாம்பு தீண்டி மரணமடைந்தவராவர்.

இவர் இன்று காலை வீட்டை விட்டு வெளியில் வந்த போது சுற்றுமதிலில் நின்ற இரத்தப் புடையன் பாம்பு காலில் தீண்டியதாகவும் உடனே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் வழியில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இவரது சடலம் உடற்குற்றியல் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டள்ளது. இவரது மரணம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .