Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு தேவை என யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கே.ஜி.எல்.பெரேரா தெரிவித்தார்.
யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அலுவவகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
'யாழ்ப்பாண மக்களுக்காக முடிந்தளவு கடமைகளில் கண்ணியமாக செயற்பட்டு மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளோம். யாழ். மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவர். யாழ். மக்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக கிழமை நாளான புதன்கிழமை எனது அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்திக்க முடியும். அவர்களுக்கு எந்தவித தடையும் இருக்காது.
நாங்கள் செய்யும் சேவைகளுக்கு யாழ். மக்களிடமிருந்து பூரணமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். அப்போது தான் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் ஒற்றுமை ஏற்படும்.
நேற்று திங்கட்கிழமை நான் எனது கடமையைப் பொறுப்பேற்ற நிலையில், மாலை வேளைகளில் யாழ். நகரப்பகுதியை சுற்றிப் பார்க்கின்றேன். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளை மிக அவதானமாக கண்காணித்து வருகின்றேன். குற்றச்செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு தேவை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
1 hours ago
3 hours ago