2025 மே 17, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக இந்திய உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                           (கவிசுகி)

வடகடல் பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய ஆழ்கடல் மீன்பிடி றோலர் தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

'இந்திய மீனவர்கள் இலங்கை வடகடலில் உட்பிரவேசிக்கின்றமை மற்றும் இந்திய பாரம்பரிய சிறுகடற்றொழில் றோலர் படகுகள்  பாதிப்படைகின்றமை தொடர்பாக தமிழ் நாடு சிறுகடற்றொழில் சங்கங்களின் மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தியினால் இந்த வழக்கு வடபகுதி மீனவர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சுக்கு இது தொடர்பாக தாங்கள் அறிவித்துள்ளதாகவும் தங்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் கச்சதீவில் இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் இதில் இந்திய கடற்றொழிலாளர்கள் தாங்கள் ஆழ்கடல் மீன்பிடியை விடமுடியாத நிலையிலிருப்பதாகவும் மாற்றுத் தொழிலை மத்திய அரசு செய்து தருமானால் தாங்கள் ஆழ்கடல் மீன்பிடி றோலரை விடுவதாக தெரிவித்துள்ளதாகவும்  தவரெட்ணம் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .