2025 மே 17, சனிக்கிழமை

யாழ். வைத்தியசாலையில் லிப்ட் வசதி இல்லாமல் அவதிப்படும் நோயாளர்கள்

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் லிப்ட் வசதிகள் இல்லாத நிலையில் நோயாளர்களை மேல் மாடிகளுக்கு கொண்டு செல்லும் அவர்கள் தவறி கீழே விழுந்து விடுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை நோயாளர் ஒருவர் மேல் மாடியிலுள்ள 10ஆம் இலக்க வாட்டுக்கு கொண்டு செல்லும் போது தறவி வீழ்ந்துள்ளார்.

இச்சம்பவத்தினால் நோயாளர்கள் பெருதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு லிப்ட் வசதிகள் இல்லாமை காரணமாக நோயாளர்களைக் காவிக் கொண்டு நான்கு பேர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'இலங்கை மின்சார சபையினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு லிப்ட் வசதிகளுக்காக 85 இலட்சம் கொடுக்கப்பட்டு 2 வருடங்களாவதாகவும் இருப்பினும் அதனை இதுவரை பூட்டுவதற்காக எந்த வித வேலைத்திட்டமும் செய்யப்பட வில்லை என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .