2025 மே 17, சனிக்கிழமை

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகருக்கு பகிரங்க பிடியாணை

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான வழக்கொன்றுக்காக தொடர்ந்து ஐந்து தடவை நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான இந்த வழக்கில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு நீதிமன்றிற்கு வருகை தருமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.  இதனால், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.விஸ்வநாதன் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .