2025 மே 17, சனிக்கிழமை

புத்தூரில் வெடிவிபத்து; இரு சகோதர்கள் காயம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். புத்தூர், ஆவரங்கால் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்துச் சம்பவமொன்றில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை வயல் காணி ஒன்றில் இருந்த கற்பாறையை அகற்ற முயற்சித்துள்ள இவர்கள், சீன வெடிமருத்தால் தயாரிக்கப்பட்ட டைனமைட்டைப் பயன்படுத்தி கற்பாறையை அகற்றும் போது தவறுதலாக அது வெடித்துச் சிதறியதில் இரு சகோதர்களும் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் காயமடைந்த சகோதரர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .