2025 மே 17, சனிக்கிழமை

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதனை தாக்கிய பிரதான சந்தேக நபருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உதயன் முன்னாள் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 20,000 ரூபா காசுப்பிணையும் 2 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் மேற்படி சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருக்க வேண்டும் என்பதுடன் பிணையாளிகள் இருவரும் யாழ்.நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் சந்தேக நபர் பிரதி வெள்ளிக் கிழமை தோறும் யாழ்.நீதிவான் நீதிமன்ற பதிவாளர் முன்னியையில் ஒப்பமிட வேண்டும் என்ற நிபத்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆறு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாக யாழ்.நீதிவான் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .