2025 மே 17, சனிக்கிழமை

முதன்முறையாக முச்சக்கரவண்டிகளை செலுத்தும் பெண்கள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் முச்சக்கரவண்டிகளைச் செலுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பெண்கள் முச்சக்கரவண்டிச் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட இப்பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினமான நேற்று வியாழக்கிழமை  பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் மானிய அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் பெண்கள் யாழ். மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்  பெண்கள் என கிராம அலுவலகர்களின் உதவியுடன்  10 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • ruzny Tuesday, 13 March 2012 03:52 PM

    நல்ல திட்டம்.

    Reply : 0       0

    ashraff Wednesday, 14 March 2012 02:42 PM

    நல்லா சவாரி வருமுங்கோ. ஜொள்ளர்கள் இருக்காங்க கவனமுங்கோ. கிணறு வெட்டி பூதம் வந்த கதயாபோயிடுமுங்கோ. இயற்கை மாறினால் ப்ரோப்லம் தானுங்கோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .