2025 மே 17, சனிக்கிழமை

வட இலங்கை சங்கீத சபையில் கலாவித்தகர் பட்டங்களை பெற்றவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 மார்ச் 12 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)
வட இலங்கை சங்கீத சபையில் கலாவித்தகர் பட்டங்களை பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, பல்வேறு கலைத்துறையிலும் கலாவித்தகர் பட்டங்களை பெற்ற 42 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும் யாழ்ப்பாணம் கல்வி வலய பணிப்பாளருமான எஸ்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை பேராசிரியர் கலைவாணி இராமநாதன், இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி ச.ரேணுகா, இலங்கை வங்கி சுன்னாகம் கிளை முகாமையாளர் பொன்.பாலகுமார், வட மாகாண கல்வி  திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன், வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவலகள் விளையாட்டுத்துறையின் செயலாளர் எஸ்.சத்திய சீலன், திருமதி இராஜேஸ்வரி சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .